தனுஷ் மீதான வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் இருந்து சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தியதாக புகார்கள் எழுந்தது.

இதனால் நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் புகார் கொடுக்கப்பட்டது. குறிப்பாக து சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தொடர்பான காட்சிகளை நீக்கவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கு எதிராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தனர். அதில் விசாரணைக்கு தடை விதிக்கக் வேண்டும் என்றும்  விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கின் அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment