Connect with us

“நீட்-எஸ்.எஸ்” தேர்வு முறை மாற்றத்தை எதிர்த்து வழக்கு!!

News

“நீட்-எஸ்.எஸ்” தேர்வு முறை மாற்றத்தை எதிர்த்து வழக்கு!!

6c6b05f47195cd5b9eae3a9ee3092d4d

தற்போது நம் தமிழகத்தில் வாழ்கின்ற மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை கொடுக்கும் தேர்வு என்றால் அனைவரும் கூறுவது நீட்தேர்வு தான். மேலும்  பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முயற்சி செய்து கொள்கின்றனர். தமிழகத்தில் சில தினங்களாக இந்த நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தநிலையில் நீட் தேர்வு முறை மாற்றத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.4c2727ef8cfdb59678b4b03a07ab14dc

அந்த படி உயர் சிறப்பு மருத்துவ படிப்பு நீட் தேர்வு முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்து 41 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். நீட் தேர்வு முறை கடைசி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் புகார் அளித்துள்ளனர். நீட் தேர்வில் கடைசி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் ரத்து செய்ய மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீட் தேர்வை நடத்தும் தேசியத் தகுதித் தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நீட்-எஸ் எஸ் தேர்வுக்கான அறிக்கை ஜூலை 23ம் தேதியில் வெளியிடப்பட்டது. ஆனால் திடீரென்று நீட் எஸ் எஸ் தேர்வு  முறைகள் மாற்றப்பட்டதாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி மற்றொரு அறிக்கை வெளியிட்டது தேர்வு முகமை.

இதனால் மாணவர்கள் இதற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். மேலும் நீட் தேர்வு வினாத்தாளில் 60% கேள்விகள் உயர் சிறப்பு படங்களிலிருந்தும் 40% பொது மருந்துகள் குறித்தும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  திடீர் மாற்றத்தால் பிற துறை மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் மனுவில் புகார் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27ம் தேதியில் விரிவான விசாரணை என அறிவித்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top