Connect with us

“டி.என்.பி.எஸ்.சியில் ஆதார் எண்” கேட்பதை எதிர்த்து வழக்கு!!

News

“டி.என்.பி.எஸ்.சியில் ஆதார் எண்” கேட்பதை எதிர்த்து வழக்கு!!

b5d3628cdf8ff02615908fbe53af33a9

தற்போது நாம் படிக்கும் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் காணப்படுகிறது. மேலும் அதற்காக பல இளைஞர்கள் கடினமாக உழைக்கின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலும் பல இளைஞர்கள்  முயற்சி செய்வது டிஎன்பிஎஸ்சி  தேர்வு தான். இந்த தேர்வு குறித்து தற்போது சில பொதுநல மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஆதார் கேட்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.7c30bd8e74789a24b8d0abb0c9001c5b

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களிடம் ஆதார்  கேட்பது எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு  விண்ணப்பிப்பவர்களிடம் கேட்பது ஆதார்  எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜானகி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். டிஎன்பிஎஸ்சி ஆதார்   கேட்பதற்கு தடை விதிக்குமாறு பொதுநல மனுவில் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆதார்   கேட்பது தொடர்பாக உரிய விளக்கத்தை பெற்று தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி  தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முறையை அமல்படுத்தப்பபட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களை டிஎன்பிஎஸ்சி வலைத்தளத்தில் பதிவு செய்தும் தனி அடையாளமாக எண் தரப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

தனி அடையாள எண்ணை பயன்படுத்தி அனைத்து தேர்வுகளும் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அரசு குற்றவியல் வழக்கறிஞர் பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் அரசு குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பித்த போது ஆதார் எண்ணைக் குறிப்பிட கோரப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக டிஎன்பிஎஸ்சி விதி மீறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விண்ணப்பித்தவர்களிடம் ஆதார் கோரும் டிஎன்பிஎஸ்சி நடைமுறைக்கு தடை விதிக்க மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top