அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள் மீது 4 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் 17.5 வயது முதல் 21 வயது வரையில் உள்ளவர்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு, அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார், உத்தரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட நாடு முழுவதும் கடுமையான வன்முறை நிகழ்ந்தது.
இந்நிலையில் அக்னிபாத் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் பல மாநிலங்களில் இருக்கும் உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்ற உத்தரவு படி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அக்னிபாத் திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் இது தொடர்பாக 4 வாரத்திற்குள் மத்திய அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.