Connect with us

நடிகர் விஷால் மீதான வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு!!

10 1462847627 vishal 600 1647083614

பொழுதுபோக்கு

நடிகர் விஷால் மீதான வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு!!

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் விஷால் தன்னுடைய படம் தயாரிப்புக்காக, கோபுரம் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் அன்புசெழியனின் ரூ. 21.29 கோடி கடனை வாங்கியுள்ளார். இந்தக் கடனை திருப்பி செலுத்துவதற்கு லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தும் வரையில் விஷால் நிறுவனத்தில் தயாரிக்கும் அனைத்து பட உரிமைகளும் லைக்கா நிறுவனம் பெறுவதாக ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.

இருப்பினும் வீர வாகை சூடும் என்ற படத்தை வெளியிட்டதால் ரூ.15 கோடி லைக்கா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த சூழலில் நடிகர் விஷாலுக்கு ரூ.18 நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனை அடைப்பதற்காக படங்களில் நடித்து வருவதாக கூறினார். இதனையடுத்து அவரது சொத்து விவரங்களை பிரமான பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது பேசிய வழக்கறிஞர் பிரமான பத்திரமாக தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறினார்.

இதனை ஏற்ற நீதிபதி நடிகர் விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு விசாரணை செப்டம்பர் 23 தள்ளிவைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top