கோர விபத்து: கார்கள் ஒன்றுக்கொன்று மோதி 3 பேர் பலி!!

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 3 கார்கள் ஒன்றொடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அடுத்த செயந்தம்பட்டியில் 3 கார்கள் ஒன்றொடு ஒன்று மோதிக்கொண்டது. இதனிடையே கார் ஒன்றில் டயர் வெடித்தாக கூறப்படுகிறது.

பெரும் சோகம்! உலகின் அழுக்கு மனிதர் மரணம்!!

அப்போது எதிர்திசையில் வந்த 2 கார்கள் அதிவேகத்துடன் வந்து மோதிக்கொண்டது. இத்தகைய விபத்தில் 3 பெண்கள் சமபவ இடத்திலேயே பரிதாபமாக இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளனர்.

அதே போல் ஒரு சிறுவன் உட்பட 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை சூழ்ந்த பட்டாசு புகை!! ஒருவர் 31 சிகெரட் பிடிப்பதற்கு சமம்!!

இதனிடையே விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment