தமிழ்நாட்டை கலக்கிய கார் திருடன் பெங்களூருவில் கைது!!

இந்தியாவில் பல பகுதிகளில் திருட்டு சம்பவம் அதிகரித்து உள்ளது. இதில் பல படித்தவர்கள் கூட ஈடுபடுவதும் ஆங்காங்கே தெரிகிறது. அவர்கள் தங்கள் படிப்பினை மிகவும் நுணுக்கமாக எவ்வாறு திருடலாம் என்று பயன்படுத்துகின்றனர். போலீஸ்

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கார் திருட்டு நடைபெற்றது. இந்த கார் திருட்டில் ஈடுபட்டவனை தற்போது பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி சென்னையில் கார் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ராஜாமணியை பெங்களூர் போலீஸ் கைது செய்தது.

வாலாஜா சாலையில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்த கார் திருடன் ராஜாமணியை பெங்களூர் போலீஸ் கைது செய்தது. குழந்தைகளுடன் நின்று கொண்டு தம்பதியை 7 பேர் மிரட்டி காரில் கடத்தி செல்வதாக போலீசுக்கு தகவல் வந்தது.

தகவலை அடுத்து சிசிடிவி பதிவை ஆராய்ந்து பார்த்ததில் ராஜாமணியை பெங்களூர் போலீஸ் அழைத்து சென்றது தெரிய வந்துள்ளது. இந்த ராஜாமணி மீது புதுச்சேரி மற்றும் கரூரில் இதுபோன்று கார் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.தமிழகத்தின் பிரபல கார் திருடனான ராஜாமணி தற்போது பெங்களூர் போலீசார் கைவசம் உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment