Connect with us

நட்புக்காக பட பாணியில் 10 லட்சத்தைக் கொட்டிய விவசாயி. வாயடைத்துப் போன கார் ஷோரூம் ஊழியர்

Untitled 99

செய்திகள்

நட்புக்காக பட பாணியில் 10 லட்சத்தைக் கொட்டிய விவசாயி. வாயடைத்துப் போன கார் ஷோரூம் ஊழியர்

நட்புக்காக பட பாணியில் 10 லட்சத்தைக் கொட்டிய விவசாயி. வாயடைத்துப் போன கார் ஷோரூம் ஊழியர்

கர்நாடகாவில் கார் வாங்கச் சென்ற விவசாயி ஒருவரின் தொழில், உடை மற்றும் தோற்றத்தைக் கண்டு கார் ஷோரும் ஊழியர் கார் குறித்த விபரங்களைக் கூற மறுத்ததோடு கிண்டல் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

அதாவதி கர்நாடகா மாநிலத்தின் தும்கூர் என்ற மாவட்டத்தைச் சார்ந்தவர் கெம்பகௌடா, இவர் கார் வாங்க எண்ணி தும்கூரில் உள்ள கார் ஷோரூம் ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

அங்கு ஊழியரிடம் கார் குறித்த விவரங்களைக் கேட்டபோது ஊழியர் கெம்பகௌடாவின் தொழில் குறித்துக் கேட்டபின் கார் குறித்த விபரங்களைக் கூற மறுத்துள்ளார்.

மேலும் இந்தக் காரின் விலை 10 ரூபாய் கிடையாது, 10 லட்சம் என்று கூறிக் கிண்டலடித்துள்ளார்.

அதன்பின்னர் கெம்பகௌடா தன்னிடம் 10 லட்சம் ரூபாய் உள்ளதாகக் கூற, ஊழியர் அரை மணி நேரத்திற்குள் வந்தால் கார் தருவதாகக் கூறியுள்ளார்.

கெம்பகௌடா தன் நண்பர்களிடம் கேட்டு அரை மணி நேரத்திற்குள் 10 லட்சம் ரூபாயைத் திரட்டிக் கொண்டு ஷோரூம் வர, ஊழியர் ஷாக் ஆகியுள்ளார்.

அதன்பின்னர் காரை உடனடியாக டெலிவரி செய்யும் நடைமுறை இல்லை என்று கூறியுள்ளார், இதனால் விவசாயி கோபம் அடைந்ததையடுத்து ஷோருமில் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர் ஊழியர் இதுகுறித்த மன்னிப்பு கடிதத்தை எழுதி விவசாயியிடம் கொடுத்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top