குமுளி மலை சாலையில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்துல், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று திரும்பிய கார் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எஸ் எஸ்.புரம் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நேற்று முன் தினம் சென்றுள்ளனர்.சபரிமலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, நேற்று கோவிலில் இருந்து ஆண்டிபட்டி வழியாக ஊர் திரும்பியுள்ளனர்.
நள்ளிரவில் தமிழக கேரளா இணைப்புச் மலைச்சாலையான குமுளி வழியாக சென்று கொண்டிருந்த போது , மாதா கோயில் அருகில் உள்ள பாலத்தில் மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
பெரியார் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் ராட்சத இரும்பு குழாய்கள் மீது தலைகுப்பற விழுந்தது விபத்துக்கு உள்ளானதில், கோயிலுக்குச் சென்ற 7 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் சென்ற சிறுமி உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் மீட்டுள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.