சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் ஐடி பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிபவர் கிருத்திகா. இவருடன் பணிபுரியும் கிருத்திகா, ஸ்ரீதர், அவிஷா உள்ளிட்டோர் காரில் அதிவேகமாக Long Drive சென்றதாக கூறப்படுகிறது.
பீகாரில் பரபரப்பு!! திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்த பாலம்..!!
இந்நிலையில் ஸ்ரீதர் காரை அதிவேகமாக இயக்கியதால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தது அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் சாலையின் தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஐடி ஊழியர் கிருத்திகா தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
சொத்துப்பட்டியல் வெளியிட நான் ரெடி.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெத்தியடி பதில்!!
இதற்கிடையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த வந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.