தூள் கிளப்பிய நூறு ஊழியர்களுக்கு கார் பரிசு..! சர்ப்பிரைஸ் கொடுத்த நிறுவனம்…

சென்னை மணப்பாக்கத்தில் தனியார் ஐ .டி நிறுவனம் ஒன்று 100 ஊழியர்களுக்கு காரை பரிசாக அளித்துள்ளது. சென்னையை தலைமை இடமாக கொண்டு மணப்பாக்கத்தில் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

கடந்த 2009- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஊழியர்களுக்கு வித்தியாசமான முறையில் பரிசுகளை வழங்குவது வழக்கம். குறிப்பாக இதுவரையில் ஐபோன், தங்க நாணயங்களை பரிசாக வழங்கியுள்ளது.

இந்நிலையில் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 100 ஊழியர்களை தேர்வு செய்து கார்களை பரிசாக வழங்கியுள்ளதாக மார்க்கெட்டிங் தலைவர் ஹரிஸ் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

அந்த வகையில் இந்த கார் பரிசினை அந்நிறுவனத்தின் தலைவர் முரளி விவேகானந்தன், நிர்வாக செயலதிகாரி காயத்திரி விவேகானந்தன் ஆகியோர் வழங்கினர்.

மேலும், தாங்கள் பெற்ற லாபத்தின் சிறு பங்கை ஊழியர்களுக்கு தர வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வாறு செயல்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment