கோவை கார் சிலிண்டர் விபத்து கைதான மேலும் 3 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் கார் சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கார் விபத்தில் உயிரிழந்த முபின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டதில் வெடிப்பொருட்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.
அதோடு சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் சிலிண்டர் விபத்தில் தொடர்புடைய முகமது தவ்ஃபிக், உமர் ஃபரூக், ஃபெரோஸ்கான் ஆகிய 3 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இன்றைய தினத்தில் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் வருகின்ற டிச.22ம் தேதி வரையில் நீதிமன்ற காவல் வழங்கி பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.