
தமிழகம்
குடிபோதையில் பறந்த கார்-தலைமை காவலர் தலையில் படுகாயம்!!
நம் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சாலை விபத்துகள் அதிகமாக நிலவுகிறது. இவற்றிற்கு பெரும் காரணம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தான். இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு சாலையிலும் எச்சரிப்பு பலகை அமைக்கப்பட்டு இருக்கும்.
மேலும் மது அருந்தி வாகனம் ஓட்டு அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதியும். இந்த நிலையில் குடிபோதையில் இளைஞர் ஒருவர் கார் ஓட்டி சென்று காவலர் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தேனாம்பேட்டை செனடாப் சாலையில் நடந்துள்ளது. அதன்படி தேனாம்பேட்டை சாலையில் தலைமை காவலர் நாராயணன் மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.
தலையில் படுகாயம் அடைந்த தலைமை காவலர் நாராயணன் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் ராஜா மற்றும் தென்றல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.
