இப்படி ஒரு சண்டைக்காட்சியா? அதிக ரிஸ்க் எடுத்து மிரள வைத்த கேப்டன்!

தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகள் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான். தான் நடித்த பெரும்பாலான படங்களில் டூப் போடாமல் நடித்து அந்தக் காட்சிகளுக்கு உயிரூட்டியவர். கேப்டன் பிரபாகரன், உளவுத்துறை, தாயகம், சேதுபதி IPS, மாநகரக் காவல், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரண போன்ற படங்களில் சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருப்பார் கேப்டன். இவரது தேசப்பற்று வசனங்களுக்கும், வில்லன்களின் இடுப்பை ஒடிக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் கைதட்டாத ரசிகர்களே இல்லை.

ஏவிஎம் தயாரிப்பில் கடந்த 1994 பொங்கல் வெளியீடாக வந்த படம்தான் சேதுபதி IPS. பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படம் அப்போது இதனுடன் மோதிய வீட்ல விஷேசங்க, அமைதிப்படை, சிந்துநதிப்பூ போன்ற படங்களுக்கு ஈடாக வசூலில் சாதனை புரிந்தது. சமீபத்தில் மறைந்த கேப்டன் அவர்களின் நினைவுகளை அவருடன் பயணித்த பலரும் பகிர்ந்து வரும் வேளையில் ஏ.வி.எம் நிறுவனம் அவரின் பேட்டி ஒன்றைப் பகிர்ந்துள்ளது.  அந்தப் பேட்டியில் கேப்டன் விஜயகாந்த் பேசும் போது,“இதுவரை நான் நடித்த படங்களில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்த சண்டைக் காட்சி எதுவென்றால் அது சேதுபதி IPS படத்தில் வரும் காட்சிதான்.

தாலி வாங்க பணம் கேட்ட வசனகார்த்தா.. தான் கொடுக்காமல் அண்ணனை வைத்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். இப்படி ஒரு சென்டிமெண்ட்டா?

தீவிரவாதிகள் என்னைக் கொல்ல முயற்சிப்பது போன்ற இந்தக் காட்சியை 18 நாட்களாக எடுத்தோம். கிட்டத்தட்ட இந்தக் காட்சிக்காக தினமும் 20 கார்களை நடுரோட்டில் ஓட விட்டு அந்தக் காட்சியானது படமாக்கப்பட்டது. இப்படியாக தினமும் சுமார் அரை மணிநேரம் இந்தக் காட்சிக்காக நடுரோட்டில் கார்களை ஓட விட்டு ஷூட்டிங் செய்தோம். நான் இதுவரை நடித்து வெளியான சண்டைக் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்த காட்சி இதுவேயாகும். தயாரிப்பு தரப்பு இதற்காக முழு ஒத்துழைப்பு அளித்தனர்“ என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் கேப்டன் விஜயகாந்த்.

உண்மையாகவே கேப்டனின் சண்டைக் காட்சியைக் காண்பதற்காகவே திரையில் கூட்டம் குவியும். குறிப்பாக 2000 ஆண்டுகளுக்குப் பின் வந்த வல்லரசு, நரசிம்மா, வாஞ்சிநாதன், பேரரசு, தர்மா, விருதகிரி போன்ற படங்களில் கேப்டன் வில்லன்களை வெளுத்து வாங்குவார். இப்போது வெறும் கிராபிக்ஸிலும், ஸ்லோ மோஷனிலும் சண்டைக் காட்சிகள் காண்பிக்கப்படுவது டிரெண்ட் ஆகி வரும் வேளையில் கேப்டன் விஜயகாந்த் 1990களிலேயே மின்னல் அடியாக பறந்து பறந்து பல காட்சிகளில் வில்லன்களை துவம்சம் செய்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.