Connect with us

கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள்: அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் வாழ்த்து!

Tamil Nadu

கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள்: அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் வாழ்த்து!

89c47fcc28484190d4ae37e6938c6950

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட உள்ளதை அடுத்து அரசியல் பிரபலங்கள் திரையுலகினர் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை வீட்டில் எளிமையாக கொண்டாட இருப்பதாகவும் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற அரசியல் பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்றும் விஜயகாந்த் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்

மேலும் தனது பிறந்தநாளின் போது ஏழை எளிய மக்களுக்கு தேமுதிக கட்சியின் தொண்டர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அதிகாலை விஜயகாந்த் அவர்கள் தனது வீட்டில் எளிமையாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

விஜயகாந்த் அவர்கள் பிறந்த நாளை கொண்டாடி வருவதை அடுத்து அது குறித்த ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திரையுலகம், அரசியல் என இரண்டு துறைகளிலும் தனக்கென தனி முத்திரையை பதித்த விஜயகாந்த் அவர்களுக்கு நம்முடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top