ஒரே குஷி போல ஆர்யா; 3 மொழிகளில் வெளியாகிறது ஆர்யாவின் கேப்டன்!

பாஸ் என்ற பாஸ்கரன், அவன் இவன் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை மக்களுக்கு கொடுத்தவர் நடிகர் ஆர்யா. இவர் சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.

ஆர்யா

அதன் பின்னர் இவரின் படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் சில மாதங்களுக்கு முன் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் அறிமுகமாகி உள்ளார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது, அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளியான அரண்மனை 3 என்ற திரைப்படம் இவருக்கு கலவையான விமர்சனத்தை கொடுத்தது.

ஆர்யா

இந்த நிலையில் கடந்த தீபாவளியன்று எனிமி  திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்து சில நாட்களிலேயே ஆர்யாவின் படம் தமிழ் சினிமாவில் வெளியாகி மீண்டும் தமிழ் சினிமாவில் தனது காலை பதித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஆர்யா நடிப்பில் 33வது படத்தின் பெயர் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் மூன்று மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி ஆர்யா நடிக்க உள்ள 33வது திரைப்படத்திற்கு கேப்டன் என்று பெயர்.

இந்த திரைப்படத்தினை பிரபல இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கவுள்ளார். இந்த திரைப்படத்தினை ஷக்தி சவுந்தர்ராஜ் இயக்கவுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment