Connect with us

கேப்டன் மில்லர் படத்தின் புது லுக் – ஸ்டைல்லா இருக்கும் நடிகர் தனுஷ் – வைரலாகும் போட்டோ!

thanu

பொழுதுபோக்கு

கேப்டன் மில்லர் படத்தின் புது லுக் – ஸ்டைல்லா இருக்கும் நடிகர் தனுஷ் – வைரலாகும் போட்டோ!

தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகர் தனுஷ் . இவர் தற்போது நானே வருவேன்,கேப்டன் மில்லர்,வாத்தி போன்ற படங்களில் கமிட்டாக்கியுள்ளார் . அதை தொடர்ந்து வட சென்னை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

தனுஷ் அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க உள்ளார் .சாணி காகிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது 1930கள் சார்ந்த கதைக்களமாகும். இந்த படமானது பான் இந்தியா படமாக உருவாகிறது.சமீபத்தில் கேப்டன் மில்லர் பார்ட்ஸ் லுக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.

Captain Miller2

இந்த படத்திற்கு தனுஷ் தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளார், படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.படத்தின் படப்பிடிப்பு முதலில் தென்காசியில் தொடங்க உள்ளதாகவும் அங்குள்ள வனப்பகுதியில் முதல் சேடூலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் Sumesh Moor மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்தித்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

இனி பள்ளி ஆண்டு விழாக்களில் எல்லாம் இந்த பாடல் தான்! பொன்னியின் செல்வன் பாடல் குறித்து கார்த்தி பெருமிதம்…

63276eec7dbf6

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அடுத்த லுக் ஒன்று வெளியாகியுள்ளது, தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீண்ட முடி மற்றும் தாடியுடன் தனுஷ் ஸ்டைலாக தோன்றியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top