கேப்டன் கோலி ரிட்டன்ஸ்! இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!!

கிரிக்கெட் வீரர்களால் அதிகளவு நேசிக்கப்படும் நாடாக நியூசிலாந்து உள்ளது. குறிப்பாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனின் பண்பின் காரணமாகவே நியூசிலாந்து அணிக்கு பெரும் ஆதரவு உள்ளது. ஆனால் தற்போது நியூசிலாந்துக்கும் இந்தியாவிற்கும் பெரிய பகை உருவாகியுள்ளது.

test match

ஏனென்றால் ஐசிசி 50 ஓவர் வேர்ல்டு கப் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை நியூசிலாந்து அணி தோற்கடித்தது. அதுமட்டுமில்லாமல் ஐசிசி டெஸ்ட் வேர்ல்டு கப் வின் இறுதிப்போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து அணி தோற்கடித்து கோப்பையை தட்டி தூக்கியது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஐசிசி t20 வேர்ல்டு கப், இந்தியாவின் அரையிறுதி நுழையும் வாய்ப்பையும் நியூசிலாந்து அணி பறித்துக்கொண்டது. இதனால் இந்திய கிரிக்கெட் பிரியர்கள் நியூஸிலாந்து மீது பெரும் கோபத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி 3 டி20 தொடரையும் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. அதோடு இரண்டு டெஸ்ட் தொடர்களும் நடைபெற்றுவருகின்றன.

முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் எதிர்பார்க்கதக்கதாக காணப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

விராட் கோலி

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கேப்டன் கோலி இந்திய அணியில் மீண்டும் இணைந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி. மும்பையில் நடைபெறுகின்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment