
தமிழகம்
கொலை நகரமாக மாறிய தலைநகர்!! மக்களின் பாதுகாப்பு?
நாளுக்கு நாள் தலைநகர் சென்னையின் மீது அச்சங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் குறிப்பாக சமீப காலத்தில் சென்னையில் தொடர்ந்து வழிபறி, கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி அவ்வப்போது சட்டம்-ஒழுங்கு சீராக குற்றசாட்டை வைப்பார். அதுவும் குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனபின்பு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கெட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தலைநகர் சென்னை தற்போது கொலை நகரமாக மாறி வருகிறது என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. தலைநகர் கொலை நகரமாக மாறி சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன என்றும் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிகைகளை முடக்குவதிலேயே முழு முயற்சியாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி புகார் கூறியுள்ளார்.
