
பொழுதுபோக்கு
அஜித்தை இனிமே பார்க்க முடியாதா? என்ன காரணமா இருக்கும்!
அஜித் மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ படப்பிடிப்பில் நடித்துவருகிறார் . அஜித், வினோத் மற்றும் போனி கபூரின் கூட்டணி மூன்றாவது முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளது.
அஜித், வினோத் கூட்டணியில் இறுதியாக வெளிவந்த வலிமை படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை,அதனால் இந்த படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
வினோத்தின் முந்தைய படங்களான சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய படங்களை போல இப்படத்தின் திரைக்கதையையும் விறுவிறுப்பாக அமைக்கும் பணியில் வினோத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். வங்கி கொள்ளையை மையமாக வந்து உண்மை சம்பவங்களை இணைத்து படத்தின் கதையை உருவாக்கி வருகின்றது .
இதற்கிடையில் அஜித் தற்போழுது ஐரோப்பா டூர் முடித்துவிட்டு சில தினங்களின் முன் சென்னை திரும்பியுள்ளார்.தற்போழுது புனேவில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.அந்த ஷுட்டிங்கில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
இந்தப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் அதற்காக உடல் எடையை குறைத்துவருவதாகவும் நாம் தெரிந்ததே. அவர் ஐரோப்பா டூரின் போது ஒரு கெட்டப்பாக காதில் கடுக்கண், நீண்ட தாடி ,கண்களில் கண்ணாடி என அஜித் காணப்பட்டார்.
இந்நிலையில் அவரது அடுத்த கெட்டப்பில் புனேவின் சூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அவரின் அடுத்த கெட்டப் எப்படி இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முன்னணி காமெடி நடிகரின் மகன் புகைப்படமா இது? ரொம்ப கியூட்டா இருக்குதே!
இன்னும் சில தினங்களில் பூனாவில் துவங்கவுள்ள சூட்டிங்கில் அவர் கலந்துக் கொள்ள போவதாகவும் இந்த சூட்டிங்கில் அஜித்தின் அடுத்த கெட்டப்புடன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன என கூறப்படுகிறது. பபிடத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க இந்த கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் வெளிவராமல் பாதுகாப்பாக வைக்க படுவதாக கூறப்படுகிறது.
அதனால் படம் முடிந்து வெளியாகும் வரைக்கும் அஜித்தின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடியாது என்பது தான் உண்மை.
