
செய்திகள்
பதவியிலிருந்து விலக முடியாது ..! மகிந்த ராஜபக்சே திட்டவட்டம்;
இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என மகிந்த ராஜபக்ச மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதர நெருக்கடி நிலவி வருவதால் அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்கமுடியாத நிலையில் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த சூழலில் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடியாது என மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தங்களின் கட்சி பெரும்பான்மையை இழக்கும்போது மட்டுமே ராஜினாமா செய்ய முடியும் என்று அவர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
தங்களை பதவியிலிருந்து விலகுமாறு ஒட்டுமொத்த மக்களும் கோரவில்லை என்றும் ஒரு தரப்பினர் மட்டுமே கூறுவதாக மகிந்த ராஜபக்சே கூறினார். மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் அடுத்த தேர்தலிலும் ஆட்சி அமைப்போம் என தெரிவித்தார்.
