ஒன்னு வந்தாலே தாங்க முடியாது; இப்பொழுது ரெண்டா என்ன ஆகுமோ?

வங்கக்கடல்

தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் மழை நீர் வெள்ளம் போல  செல்கிறது. இதன் மத்தியில் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன. ஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளன.

அரபிக்கடல் வங்கக் கடலில் வடக்கு, மத்திய மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளது. அரபிக் கடலின் தென் கிழக்கு, கேரள பகுதியில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளது.

மீனவர்இதனால் ஒரே நேரத்தில் இரண்டு கடல்களிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் மிக கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அக்டோபர் 17ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் அக்டோபர் 17-இல் குமரிக்கடல், மன்னார்வளைகுடா, ஆந்திரா பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கூறியுள்ளது. இன்றும், நாளையும் தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று போல  வீச வாய்ப்புள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print