
தமிழகம்
பணிமாறுதலை உரிமையாக கோர முடியாது! அது அரசு தனிப்பட்ட அதிகாரம்!!
பொதுவாக தமிழகத்தில் அரசு பணியில் வேலை செய்யும் பலருக்கு சொந்த பகுதிகளில் வேலை கிடைக்காது. இதனால் பலரும் பணி இடமாற்றத்தை கோரிக்கையாக வைப்பர். அதிலும் ஒரு சிலர் உரிமையாக கோரி வைத்து வழக்குத் தொடுப்பர்.
இந்த விவகாரத்தில் ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. அதன்படி பணி மாறுதலுக்கான கலந்தாய்வு என்பது சலுகைதான் தவிர பணிமாறுதல் உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
போலீசுக்கு தெரியாமல் குற்றவாளி தலைமறைவா? சரமாரியான கேள்விகளை கேட்ட நீதிபதி..!!
திருவள்ளூர் மாவட்டம் கேசவ ராஜபுரம் பள்ளி தலைமை ஆசிரியை ஜமுனாராணி என்பவர் தாக்கல் செய்த மனு இன்றைய தினம் வழக்குக்கு வந்தது. காலியாகும் தலைமை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு அழைக்குமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் எதுவும் காலியாக இல்லை என்பதால் கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை என்று அரசு தரப்பு கூறியது. பணி நிபந்தனைகள் சட்டப்படி பணியிடமாற்றம், பணி நியமனம் என்பது அரசு தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்று நீதிபதி கூறினார். அரசின் முடிவில் தலையிட முடியாது என தலைமையாசிரியர் ஜமுனாராணி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
