
தமிழகம்
“சாக்லேட் பொட்டலங்களில் கஞ்சா”….. விற்பனை கும்பலுக்கு வலைவீச்சு!!
நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் விற்பனை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போதை ‘கஞ்சா சாக்லேட்’ களை விற்ற ராஜஸ்தான் வாலிபர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேவையில் சில தினங்களுக்கு முன் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்குகஞ்சாவை சாக்லேட் வடிவத்தில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 30 வயதான கேத்தன் குமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் 35 கிலோ கஞ்சா சாக்லேட் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
அதோடு, 140 கிலோ குட்கா, பான் மசாலா மற்றும் சுமார் 13 ஆயிரம் ரூபாய் கைப்பற்றினர். இதனையடுத்து பிறகு பேசிய போலீசார் கஞ்சாவை, சாக்லேட் போல மாற்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் விற்பனை செய்து வருவதாகவும், இவர்களுடன் தொடர்புடையவர்களை வலைவீசி தேடி வருவதாகவும் கூறினார்.
