
Tamil Nadu
10ம் தேதி தேர்தலுக்கு இன்றே தொடங்கிய வேட்புமனு தாக்கல்-சூடுபிடித்தது தேர்தல் களம்!!
கடந்த சில மாதங்களாகவே நம் இந்தியாவின் தேர்தல் களம் மிகவும் சூடு பிடித்ததாக காணப்படுகிறது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக சட்டமன்ற தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நம் தமிழகத்தில் தற்போது வரை 6 மாநிலங்களவை இடங்கள் உள்ளன.
இதில் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து சந்திக்க உள்ளதாக அறிவித்தது. மேலும் காங்கிரசுக்கு ஒரே ஒரு மாநிலங்களவை இடத்தையும் ஒதுக்கியுள்ளதாக அறிவித்தது.
இந்த நிலையில் எதிர்க்கட்சியான அதிமுகவும் தேசிய கட்சியான பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மத்தியில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. மே 31-ஆம் தேதி வரை சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி இடம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
