போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கவனத்திற்கு… இலவச பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பம்!

போட்டி தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இலவச பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கும் பயிற்சி மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அதில் பங்கேற்க டி.என்.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி, ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி ஆகிய தேர்வுகளுக்கு தயாராகி வருவோர் இலவச பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரியில் 500 பேருக்கும், நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 பேருக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

www.civilservicecoaching.com-ல் மார்ச் 31வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஏப்.10ம் தேதி தொடங்கி 6 மாதங்கள் நடைபெற உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.