Connect with us

சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்!-தேர்தல் ஆணையம்;

nominations

செய்திகள்

சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்!-தேர்தல் ஆணையம்;

சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்!-தேர்தல் ஆணையம்;

அடுத்த மாதம் இந்திய அளவில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் எதிர்பார்ப்பு உடையதாக காணப்படுகிறது. அதே வேளையில் நம் தமிழ்நாட்டில் அடுத்த மாதம்  19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது வேட்புமனுத்தாக்கல் பற்றி சில முக்கிய அறிவிப்புகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜனவரி 29ஆம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்பதால் அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நேரத்தை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நிர்ணயம் செய்து ஆணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு  உள்ளவர்கள் மட்டும் தேர்தல் நாளில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. வேட்புமனுக்களை ஜனவரி 28ஆம் தேதி காலை 10 மணி முதல் தொடர்புடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தாக்கல் செய்யலாம் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top