Connect with us

வேட்பாளர் தேர்வு ராணுவ வீரர் தேர்வு போல இருக்க வேண்டும்! தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்;

ஸ்டாலின்

தமிழகம்

வேட்பாளர் தேர்வு ராணுவ வீரர் தேர்வு போல இருக்க வேண்டும்! தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்;

வேட்பாளர் தேர்வு ராணுவ வீரர் தேர்வு போல இருக்க வேண்டும்! தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்;

நம் தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஐஜேகே கட்சி மட்டும் தனித்துப் போட்டியிட உள்ளதாக கூறியுள்ளது.

இதர கட்சிகள் அனைத்தும் கூட்டணி கட்சிகளோடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது கூட்டணி கட்சிகள் காண இடங்களை பங்கேற்பது குறித்து தொண்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வாக்கு சேகரிப்பு என்பது ஒவ்வொரு கட்டத்திலும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்று அவர் கூறினார். கூட்டணி கட்சிகளுக்கு மனமுவந்து ஒதுக்குவதில் சுணக்கமின்றி செயல்பட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் கூட்டணியாக இல்லாமல் கொள்கை கூட்டணியாக தோழமை தொடர வேண்டும் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வேட்பாளர்களை தேர்வு செய்வது ராணுவ வீரர்கள் தேர்வு போல இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மகளிருக்கான ஒதுக்கீட்டில் கட்சிக்கான பணியாற்றுவோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அரசின் செயல்பாடுகளை எடுத்துக்கூறி மக்களுக்கான அரசு என விளக்கி வாக்கு சேகரிக்க என்று தொண்டர்களுக்கு கேட்டுக்கொண்டார்.

அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாடு  பட்ட பாட்டை எடுத்துகூறி வாக்கு சேகரிக்க வேண்டுமென்றும், மதவெறியை விதைக்கும் பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாடே போற்றும் வகையில் வெற்றி பெறுவோம் என்று தொண்டர்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கும் விதமாக கடிதம் அனுப்பியுள்ளார் ஸ்டாலின்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top