Connect with us

புற்றுநோய் தாக்கிய சினிமா இயக்குனரை தவறாக பேசிய ட்ராபிக் கான்ஸ்டபிள்

Entertainment

புற்றுநோய் தாக்கிய சினிமா இயக்குனரை தவறாக பேசிய ட்ராபிக் கான்ஸ்டபிள்

விஜய் நடிப்பில் திருமலை படத்தையும் , ஆதி படத்தையும் இயக்கியவர் ரமணா. விஜய்க்கு பேர் சொல்லும் நடிப்பையும் அவருக்கு ஒரு பெரிய பிரேக்கையும் கொடுத்த படம் திருமலை.

c68cb040bc41772d60f3b90a61dc7a37

அதன் பிறகு தனுஷை வைத்து சுள்ளான் என்றொரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இவருக்கு சில வருடங்கள் முன்பு புற்றுநோய் பாதித்தது. தகுந்த மருத்துவத்தின் மூலம் அதில் இருந்து மீண்டு வருகிறார்.

சமீபத்தில் தனது குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்த ரமணா சரியாக கவனிக்காமல் சிக்னல் விழுந்ததை பார்க்காமல் யு டர்ன் செய்து விட்டாராம். இதனால் டிராபிக் போலீசிடம் வழக்கமான விசாரணைகளில் சிக்கி கொண்டாராம்.

இவர் தெரியாமல் செய்து விட்டேன் சார் என சொல்லவும் அதை கேட்காமல் டிராபிக் போலீசார் அவதூறாக பேசியுள்ளனர். சார் நான் ஒரு கேன்சர் பேஷண்ட் சார் என்று அதற்குறிய ஆவணங்களையும் காட்டி கேட்டிருக்கிறார்.

தள்ளி நில்லுய்யா உன் வியாதி எனக்கு ஒட்டிக்க போகுது என்று ஒரு டிராபிக் போலீஸ் பேசியதாக கூறி இருக்கிறார்.

மேலும் தனது ஒரிஜினல் லைசன்ஸை வாங்கி கொண்டு தராமல் மிகவும் அவதூறாக பேசினார்களாம். ஒரு கட்டத்தில் லைசன்ஸ் வாங்காமல் வண்டியில் ஏறிய ரமணாவிடம் அவரது மகள் நான் போய் வாங்கி வருகிறேன் என சென்றாராம் அவர் அபராதம் கட்ட ரெடியாக இருந்தும் என்ன என்ன பேச்சு பேசினான் அவன் நீ நில்லு என்றபடி நீண்ட நேரம் நிற்க வைத்துதான் அபராத தொகையை வாங்கினார்களாம்.

இது பற்றிய செய்தி ஒரு பிரபல வார இதழில் வர இப்போது காவல்துறை உயரதிகாரி இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளாராம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top