
செய்திகள்
நடப்பாண்டில் 9000 பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை ரத்து!!
விலை குறைவாகவும் நேரம் மிச்சம் படுத்தும் விதமாகவும் காணப்படும் போக்குவரத்து சேவை என்றால் அதனை ரயில் போக்குவரத்து சேவை என்றுக் கூறலாம். இவை ஜம்மு காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்புடைய பொதுப் போக்குவரத்து சேவையாக காணப்படுகிறது.
இந்த ரயில் சேவையில் கடந்த சில நாட்களாக அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. ஏனென்றால் பல பகுதிகளில் பெரும்பாலும் எரிபொருள் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நிலக்கரி மூலம் இயக்கப்படும் ரயில் சேவைகள் இந்தியாவில் அதிகளவில் காணப்படுகிறது.
ஆனால் கடந்த நாட்களுக்கு முன்பு நிலக்கரி பற்றாக்குறை தமிழகமெங்கும் காணப்பட்டது. இந்த நிலையில் ரயில் போக்குவரத்து சேவையும் நிலக்கரி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தது. அதனை தவிர்க்கும் விதமாக கூடுதலாக நிலக்கரி மற்றும் பராமரிப்பு பணிகளை ஏற்றி செல்லும் ரயில் போக்குவரத்து சேவையை அமல்படுத்தப்பட்டது.
இதன் எதிரொலியாக பயணிகள் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் பராமரிப்பு பணி மற்றும் நிலக்கரி ஏற்றி செல்லும் ரயில்கள் கூடுதலாக இயக்குவதற்கு ஏதுவாக நடப்பாண்டில் சுமார் 9 ஆயிரம் பயணிகள் ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்து வந்துள்ளது.
