Connect with us

கணினி அறிவியல்-அரசு பள்ளிகளில் வசூலிக்கப்படும் ‘200 ரூபாய் கட்டணம் ரத்து’..!!

computer science 1614672262

தமிழகம்

கணினி அறிவியல்-அரசு பள்ளிகளில் வசூலிக்கப்படும் ‘200 ரூபாய் கட்டணம் ரத்து’..!!

தற்போது நாம் நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். இதில் கணினி படிப்பானது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. இதனால் அரசு பள்ளிகளிலேயே கணினி பாடம் கொண்டுவரப்பட்டு மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கணினி அறிவியல் குறித்தான கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் ரூபாய் 200 கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

1999 ஆம் ஆண்டுக்கு பின் விருப்ப பாடமாக பயில்வோர் இடம் இருந்து 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 200 ரூபாய் கட்டணம் ரத்து செய்வதன் மூலம் ஒரு ஆண்டிற்கு 3.50 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று  பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் இருந்து இந்த சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவ மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top