ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் ரத்து – ஐகோர்ட் உத்தரவு!!

சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக வழக்கு ஏன் தொடரக் கூடாது என்பதற்காக விளக்கம் கேட்டு கோவை ஈஷாவுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு தடை விதிக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் ஈஷா அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுப்பதற்கு இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி!!

இந்நிலையில் வழக்கின் விசாரணை அமர்வு ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஈஷா அறக்கட்டளை என்பது கல்வி நிறுவனமா? இல்லையா? என்பது தற்போது வரையில் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக கூறியது.

அதோடு 2 லட்சம் பரப்பளவில் 10 ஆயிரம் மட்டுமே கல்வி நிறுவனமாக செயல்படுத்தலாம் என்றும் மற்ற பரப்பளவை கல்வி நிறுவனமாக செயல்படுத்த முடியாது என வாதிடப்பட்டது. இதனால் நடவடிக்கை எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

டெல்லியில் பயங்கரம்! 17-வயது சிறுமி முகத்தில் ஆசீட் வீச்சு!!

அதே சமயம் உடல் நலம் மேற்கொள்ள அறக்களை துணை புரிவதால் இதனையும் கல்வி நிறுவனமாக கருத வேண்டும் என ஈஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும் என்பதால் சுற்றுச்சூழல் விலக்கு பெற உரிமை உள்ளது என்ற கருத்தினை முன்வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.