மத்திய அமைச்சரின் மகனுக்கு கிடைத்த ஜாமீன் ரத்து.!! ஒருவாரத்திற்குள் சிறைக்கு செல்ல உத்தரவு!
சில மாதங்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் அணிவகுத்து நடந்துகொண்டனர். அப்போது திடீரென்று மத்திய அமைச்சரின் மகன் கார் ஒன்று அவர்கள் மீது வரிசையாக மோதியது.
இதில் விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் மகன் ஆசிஸ் மிஸ்ரா கைதுசெய்யப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவர் ஜாமீன் மூலம் விடுதலை செய்யப்பட்டார் இந்த நிலையில் அவருக்கு கிடைத்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் மத்திய அமைச்சரின் மகன் ஆசிஸ் மீஸ்ராவின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைது செய்யப்பட்டார்.
விவசாயிகளை கொன்ற வழக்கில் ஆசிஸ் மிஸ்ராவுக்கு அலகாபாத் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீன் வழங்கியது. ஆசிஸ் மீஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அலகாபாத் நீதிமன்றம் நிலைமையை சரியாக கவனிக்காமல் ஜாமீன் வழங்கியது, உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது. ஜாமீனை ரத்து செய்து அடுத்த ஒரு வாரத்திற்குள் சிறைக்கு செல்ல ஆசிஷ் மிஸ்ரா சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
