பொது நுழைவுத்தேர்வை உடனடியாக ரத்து செய்க! ஸ்டாலின் கோரிக்கை;

நம் தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதிலும் மாணவர் சேர்க்கை அனைத்து நுழைவுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தான் இருக்கும் என்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாது என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் நுழைவுத் தேர்வுக்காக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு இளைய சமுதாயத்தினர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மத்திய பல்கலைகழக நுழைவுத் தேர்வான மத்திய அரசு ரத்து செய்திட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

பொது நுழைவுத்தேர்வு மத்திய பல்கலைக்கழகத்தில் சேர தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment