இந்த ஏழு அம்சங்களின் அடிப்படையில் தான் வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து!

இன்றைய தினம் காலையில் அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்தது. தற்போது வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்து ரத்து நீதிபதி அம்சங்கள் வெளியாகியுள்ளது. வன்னியர் உள் ஒதுக்கீடு  தீர்ப்பின் போது நீதிபதிகள் 7 அம்சங்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.வன்னியர்

  1. முதலாவதாக இந்திய அரசமைப்புச் சட்டத்திருத்தம் பிரிவு 102 ஒதுக்கீடு சட்டம் செல்லத்தக்கதல்ல என்று கூறினார்.
  2. அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒன்பதாவது அட்டவணையில் உள் ஒதுக்கீடு சட்டம் உரிய விதிகளின்படி சேர்க்கப்படவில்லை என்று நீதிபதிகள் நிராகரித்தனர்.
  3. அரசியல் சட்டம் 338b பிரிவுக்கு ஏற்ப உள் ஒதுக்கீடு சட்டம் இயற்றப்படவில்லை என்று நீதிபதிகள் கூறினர்.
  4. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, கல்வி அறிவு கணக்கெடுப்பு இன்றி உள் ஒதுக்கீடு அளித்தது மிக தவறு என்று கூறினார்.
  5. தமிழ்நாடு அரசு 1995இல் இயற்றிய சட்டவிதிகளை, வன்னியர்  உள் ஒதுக்கீடு சட்டம் பின்பற்றவில்லை என்று நிராகரிக்கப்பட்டது.
  6. அரசியலமைப்பு சட்டத்தின் 14, 15 மற்றும் 16 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் என்று கூறினார்.
  7.  மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான 20 சதவீத ஒதுக்கீட்டுக்கு எதிராக வன்னியர் உள்ஒதுக்கீடு உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த அடிப்படையில் வன்னியர் ஒதுக்கீட்டை நீதிபதிகள் நிராகரித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment