எதற்கு எடுத்தாலும் புலம்பலாமா

65f76caf3e5d34af81bc285ce950ce33-1

எப்போதும் புலம்பாதீர்கள்

குறைகளும்,ஏக்கங்களும் நிரம்பியது தான் வாழ்க்கை!

குறைகளை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்;ஏக்கங்களை பூர்த்தி செய்ய முயலுங்கள்;

இயலாத பட்சத்தில் இது தான் வாழ்க்கை என்று ஏற்றுக் கொள்ளுங்கள்;

அடிக்கடி புலம்பிக் கொண்டே இருந்தால்,நமது மன வலிமை குறைந்து விடும்;

புலம்ப வேண்டும் என்ற மன அழுத்தம் உண்டானால்,உங்களுக்கு அருகில் இருக்கும் கோவில் அல்லது ஜீவசமாதிக்கு சென்று அங்கே இது வேண்டும்;இது வேண்டாம் என்று பிரார்த்தனை செய்து வாருங்கள்; அது போதும்!!!

வெளி மாநிலம்,வெளி நாடுகளில் வாழ்ந்து வருபவர்கள் எப்போதும் ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இருங்கள்;

மூல மந்திரம்,காயத்ரி மந்திரத்தை தீட்சை வாங்கிய பிறகு தான் ஜபிக்க வேண்டும் என்று ஒரு விதி இருக்கின்றது;ஒரு வரி,இரண்டு வரி,மூன்று வரி மந்திரங்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது;

ஓம் ஶ்ரீ மகா கணபதி நமக

அல்லது

ஓம் சரவணபவ

அல்லது

ஓம் சக்தி பராசக்தி

அல்லது

ஓம் ரீங் சிவ சிவ

அல்லது

ஓம் நமோ நாரத நாராயணாய நமக

அல்லது

ஓம் ஹ்ரீம் சம்ஹார பைரவாய நமக

அல்லது

நற்பவி

அல்லது

ஓம் ஶ்ரீ வாரதாரக சித்தகுரு நம ஸ்வாஹா

அல்லது

ஓம் ஐம் க்லெளம் சிவபஞ்மியை நமக

அல்லது.

ஓம் ஹ்ரீம் உன்மத்த பைரவாய நமக

எதற்கெடுத்தாலும் புலம்பும் நபர்களுடன் விலகி இருங்கள்;இல்லாவிட்டால் உங்களிடம் இருக்கும் சிறிய அளவிலான தன்னம்பிக்கையை அவர்களது புலம்பல்கள் நிர்மூலமாக்கி விடும்;

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.