டி20 மேட்ச்சையாவது கிரவுண்ட்ல போய் பார்க்க முடியுமா? பிசிசிஐக்கு கோரிக்கை! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இன்றைய தினம் இந்தியா மற்றும் மேற்கத்திய தீவுகள் அணிக்கு இடையே 3-வது ஒருநாள் மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இருப்பினும் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு நாள் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். அவரது கவலையை போக்கும் வகையில் நடக்கின்ற 20 ஒரு போட்டியை பார்வையாளர்களை அனுமதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் டி20 போட்டியை காண பார்வையாளர்களை அனுமதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் இடையேயான 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிப்ரவரி 16, 18, மற்றும் 20 ஆம் தேதி டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.

பிசிசிஐ அனுமதி வழங்கினால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பார்கள் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.