போட்டி நிறைந்த உலகில் அரசு வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

அரசு வேலையையே தங்கள் குறிக்கோளாக வைத்துக் கொண்டு கடினமாக உழைத்தாலும் அவர்களுக்கு ஏதோ சில காரணங்களால் வேலை கிடைக்காமல் தடை பட்டுக் கொண்டே இருக்கும்.

அவர்கள் முயற்சி செய்தாலும் கீழ்க்கண்ட வழிபாடுகளையும் செய்து வருவது முழு பலனைத் தரும்.

சூரியன் உதயமாகும் நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் சூரிய பகவான் வழிபாட்டைத் தொடங்க வேண்டும்.

sn
sun prayer

வீட்டு மாடியில் எங்கு சூரிய ஒளி எங்கு நல்ல தெரிகிறதோ அங்கு சென்று சூரியனை வணங்க வேண்டும். சுத்தமான நீரை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு சூரிய வெளிச்சம் அதன் மேல் படும்படி வைக்க வேண்டும்.

கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு அந்தப் பாத்திரத்தில் உள்ள நீரில் உங்கள் முகத்தைப் பார்த்தவாறு கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்.

சூரிய காயத்ரி மந்திரம்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸ ஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

இந்த மந்திரம் ஜெபிக்க கஷ்டமாக உள்ளது என்று நினைப்பவர்கள் ஓம் ஆதித்யாய நமஹ என்ற மந்திரத்தை ஜெபிக்கலாம். அன்பர்கள் 108 என்ற எண்ணிக்கையைக் கணக்கிட துளசி மாலை, ருத்ராட்ச மாலை அல்லது ஸ்படிக மாலையைக் கொண்டு கணக்கிடலாம்.

அரசாங்க வேலை கிடைத்து வாழ்வில் எல்லா நிலைகளிலும் அருள் பெற வேண்டும் என்று நினைத்து வேண்டியதும் கிண்ணத்தில் உள்ள நீரை ஒரு செடி அல்லது வேரின் பகுதியில் ஊற்றி விட வேண்டும். அதிலும் அரச மரத்திற்கு ஊற்றுவது இன்னும் சிறப்பு.

இந்த சூரிய பகவான் வழிபாட்டினை மனதார வேண்டி 48 நாள்கள் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதைப்பின்பற்றும் பெண் அன்பர்களுக்கு இடையில் மாதவிலக்கு ஏற்பட்டால் 4 முதல் 5 நாள்களுக்கு இடைவெளி விட்டுவிட்டு விட்ட இடத்தில் இருந்து செய்யலாம்.

அனுமன் வால் வழிபாடு

அனுமனின் வாலில் அற்புத சக்தி உள்ளது. ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு தொடர்ந்து 48 நாள்கள் பூஜித்து வந்தால் பார்வதி தேவி, நவக்கிரகங்களை வழிபட்டதற்குச் சமம். அரசு வேலை கிடைக்கவும் இப்படி வழிபடலாம்.

குருபகவான் வழிபாடு

guru 1
guru

நவக்கிரகங்களில் சுபகிரகம் குரு என்ற வியாழ பகவான். தேர்வுகள், போட்டிகளில் பங்கேற்கும் நபர்கள் தங்களுக்கு கற்றுத் தந்த ஆசிரியர்கள் மற்றும் குருமார்களிடம் ஆசீர்வாதம் வாங்கி செல்வது நல்ல பலன் தரும்.

மேலும் குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் மஞ்சள் நிற பூக்களை சமர்ப்பித்து கொண்டைக்கடலை மாலை சாற்ற நல்ல பலன் கிடைக்கும்.

குல தெய்வ வழிபாடு

நேர்காணல்கள், போட்டித் தேர்வுகள் தொடங்கும் முன்பு முடிந்தால் உங்கள் குல தெய்வ கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள். நேரில் செல்ல முடியாதவர்கள் முடிந்தால் உங்கள் குல தெய்வத்தையும், முன்னோர்களையும் வீட்டில் இருந்தே நினைத்து வழிபடலாம்.

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.