Connect with us

வீட்டுக்கு வந்த மருமகளை வஞ்சித்து பேசலாமா

Astrology

வீட்டுக்கு வந்த மருமகளை வஞ்சித்து பேசலாமா

8ba8b1e56e6e98241e41ef8ddfddd26e

சாபம், பாவம் இவைகளிலெல்லாம் சிலருக்கு நம்பிக்கை இருக்கும், சிலருக்கு நம்பிக்கை இருக்காது. ஆனால் மனிதன் செய்யும் சில தவறுக்கு தண்டனை என்பது நிச்சயம் உண்டு.

அந்த தண்டனையை தான் நம் முன்னோர்கள் சாபம் என்ற பெயரிலும் பாவம் என்ற பெயரிலும் கூறி விட்டு சென்றுள்ளார்கள். அந்த வகையில் நாம் அன்றாட வாழ்வில், நம்முடைய இயலாமையின் காரணமாகவும், கோபத்தின் காரணமாகவும் நம்முடன் இருக்கும் சிலரை திட்டி விடுவோம்.

அதுவும் மற்றவர்களது மனது புண்படும் படியான வார்த்தைகளை பேசி சிலர் திட்டி விடுவார்கள். நாம் கோபம் தணிந்த பிறகு, செய்த தவறை எண்ணி வருத்தப் பட்டாலும், நம் கொட்டிய வார்த்தைகளை நம்மால் திரும்பவும் அள்ள முடியாது.

உங்களால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரும், மனவருத்தமும் நிச்சயமாக உங்களை தாக்கும். நம் வாயிலிருந்து வரக்கூடிய கடுமையான வார்த்தைகள் சில நாட்களுக்குப் பின்பு நம்மையே தாக்கும் அளவிற்கு வலிமை கொண்டது.

ஆகையால் எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களை வஞ்சித்து பேசி விடாதீர்கள். அந்த வகையில் யாரை எல்லாம் நாம் வஞ்சித்து பேசக்கூடாது என்பதை பற்றிய தெளிவை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது நம் வீட்டில் இருக்கும் பெண்.

குறிப்பாக நம் வீட்டிற்கு மருமகளாக வாழ வந்திருக்கும் பெண்ணை வஞ்சகமான வார்த்தையினாலோ, இழிவான வார்த்தையானாலோ, அவள் மனம் நோகும்படியோ திட்டவே கூடாது.

பிறந்த இடத்தைவிட்டு, சொந்த பந்தங்களை விட்டு, தன் தாய் தந்தையை விட்டு, கணவனை நம்பி மட்டும் வந்த ஒரு பெண்ணின் மனது வருத்தப்படும் படி நடந்து கொள்ளும் ஒருவருக்கு சமமானது கண்டிப்பாக பின் தொடரும். நம் வீட்டில் வசிக்கும் பெண்ணின் கண்களிலிருந்து வரும் ஒரு துளி கண்ணீரும் சாபம்தான்.

இரண்டாவதாக நம் வீட்டு குழந்தைகள்.

குழந்தைகள் என்றாலே அந்த தெய்வத்திற்கு சமமாக தான் பார்க்க வேண்டும். அவர்களுக்கு நல்லது கெட்டது என்பது தெரியாது. அந்த பிஞ்சு மனது வருத்தப்படும் படி எக்காரணத்தைக் கொண்டும் பேசி விடக்கூடாது. நாம் எதற்காக திட்டுகின்றோம் என்பதையே அந்த குழந்தையால் அறிந்துகொள்ள முடியாது. அப்படி இருக்கும்போது நாம் திட்டுவது பாவச் செயல் தானே.

மூன்றாவதாக நம் தாய் தந்தையர்.

நமக்கு உயிர் கொடுத்து இந்த பூமிக்கு நம்மை கொண்டுவரும் தெய்வங்களே இவர்கள்தான். ஆனால் நம்மில் சிலர் இவர்களை சிறிதளவும் மதிப்பது கூட கிடையாது. இது நிச்சயமாக உங்களது பாவக் கணக்கில் சேர்ந்து விடும்.

இன்றைக்கு நீங்கள், உங்கள் தாய் தந்தையரை எப்படி நடத்துகிறார்களோ, அப்படித்தான் நாளை உங்களது மகன் உங்களை வழி நடத்துவான் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் பேசும் கடுமையான வார்த்தைகள் பெற்றவர்களின் மனதினை காயப்படுத்தினால் அது உங்களைப் பின் தொடரும் என்பது நிச்சயம்.

நான்காவதாக குரு.

நம் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான முதல்படி கல்விதான். அந்த கல்வியை நமக்கு கற்றுக் கொடுப்பது குரு.

மாணவர்கள் தவறு செய்யும்போது அவர்களை தட்டிக் கேட்பது குருவின் கடமை. தவறு செய்யும் மாணவர்களை தட்டிக் கேட்டால் தான், தவறுகளை உணரும் மாணவர்கள் நல்ல வழியில் வளர்ச்சி அடைவார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களை தகாத வார்த்தைகளில் கூறும் சில வகை மனிதர்களும் இந்த பூமியில் உள்ளார்கள். ஒரு குருவை இழிவாக நடத்தும் ஒருவருக்கு பாவம் நிச்சயம் வந்து சேரும்.

ஐந்தாவதாக நோயாளிகளையும், இயலாமை கொண்டவர்களையும் நம் வஞ்சித்து பேசக்கூடாது.

நாம் ஒருவரிடம் சண்டை போடுவதாக இருந்தாலும் கூட அவர்கள் நமக்கு சமமானவர்களா என்பதை பார்க்க வேண்டும். நம்மைவிட பலம் குறைந்தவரிடம் போய் சண்டை போடக்கூடாது. அதாவது நமக்கு பாவம் செய்தவர்களாக இருந்தாலும் கூட, அவர்களது சூழ்நிலை சரியில்லாத சமயத்தில் அவர்களை பழி வாங்குவது என்பது மிகவும் தவறான ஒன்று.

அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் சமயத்தில், அவர்களின் இயலாமையை சுட்டிக்காட்டி ‘நீ செய்த பாவம் தான் உன்னை இப்போது பாடாய்படுத்துகிறது’ என்று கூறுவது கூட பெரிய தவறு தான். அது தர்மமும் அல்ல. அப்படி இருக்கும்போது நோயாளிகளிடம் கோபமாக பேசுவதையே தவிர்க்க வேண்டும். மேலே குறிப்பிட்டவர்கள் மட்டுமல்ல, பொதுவாகவே நாம் எந்த உயிரையும் இழிவாக பேசுவது என்பது தவறுதான்.

இன்று நீங்கள் செய்யும் தவறுகளானது அனைத்தும் கணக்கிடப்பட்டு, நாளை (நாளை என்றால் இந்த ஜென்மத்தில் நீங்கள் வாழ்ந்து முடிப்பதற்குள்) அந்த தவறுக்கான தண்டனையை நீங்கள் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

அந்த தண்டனைக்கு நீங்கள் பாவம் என்று பெயர் வைத்துக் கொண்டாலும் சரி. சாபம் என்று பெயர் வைத்துக் கொண்டாலும் சரி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top