தர்மயுத்தம் நடத்திட்டு இப்படிப் பேசலாமா? சூரியன் திசை மாறி உதித்தாலும் சசிகலாவோடு சேர மாட்டோம்!

இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அதிமுக சசிகலாவை ஏற்குமா? என்று கேட்டதற்கு அவர் பதிலளித்திருந்தார். அவரின் பதிலுக்கு தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

அதன்படி சசிகலாவுக்கு எதிரான தீர்மானத்தில் ஓபிஎஸ், பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கையெழுத்திட்டு உள்ளோம் என்று கூறியுள்ளார். இவ்வாறிருக்கையில் அதிமுகவினர் யாவரும் சசிகலாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறிய வரும் ஓ பன்னீர்செல்வம் தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.ஜெயக்குமார்

சசிகலாவுடன் தொடர்பு வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கபடும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் கூறினார். சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சூரியன் திசைமாறி உதித்தாலும் சசிகலாவுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலா. தொடர்புள்ள நிறுவனங்களில் சொத்து முடக்கத்தை எதிர்த்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ஸ்பெக்ட்ரம் மால், மார்க் ஐடி பார்க், ஓசன் ஸ்பிரே ரிசார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட  1600 கோடியை கொண்டு ஸ்பெக்ட்ரம் மால் உள்ளிட்ட நிறுவனங்கள் சொத்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் மால் உள்ளிட்ட நிறுவனங்கள் சசிகலாவின் பினாமிகளாக செயல்படுவதாக வருமான வரித்துறையினர் குற்றசாட்டு வைத்துள்ளனர். பினாமி சொத்து  தடுப்பு சட்டத்தின் கீழ் ஸ்பெக்ட்ரம் மால் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கியது ஐடி.

வருமான வரித்துறை நடவடிக்கையை எதிர்த்து குறிப்பிட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment