ஏர் இந்தியாவை அரசு நடத்த முடியாதா? பாஜகவின் ஏழரை ஆண்டு கால ஆட்சியில் லாபகரமாக மாற்ற முடியவில்லையா?-தயாநிதி மாறன்;

இன்றைய தினம் கூடிய மக்களவையில் திமுக எம்பி தயாநிதிமாறன் ஒன்றிய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அதுவும் குறிப்பாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து கண்டனம் தெரிவித்து பேசியிருந்தார்.

தயாநிதி மாறன்

அதோடு மட்டுமில்லாமல் ஏர் இந்தியாவை ஒன்றிய அரசே நடத்த முடியாதா? என்ற கேள்வியையும் கேட்டு இருந்தார். அதன்படி ரூபாய் 60,000 கோடி கடனை கொடுத்த அரசு மேலும் ரூபாய் 18 கோடி கொடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தை நடத்த முடியாதா என்று கேள்வி எழுப்பினார்.

ஒன்றிய அரசின் துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி கேட்டார். ஏழரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு இன்றும் முந்தைய ஆட்சிகளை குறை கூறுவது சரிதானா? என்றும் தயாநிதிமாறன் கேட்டார்.

ஏழரை ஆண்டுகளுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் லாபகரமாக மாற்ற பாஜக ஆட்சியல் முடியவில்லையா? என்றும் கேள்வி எழுப்பினார். ஏர் இந்தியாவின் ரூபாய் அறுபத்தி நான்கு ஆயிரம் கோடி கடனை ஒன்றிய அரசு செலுத்துகிறது என்றும், அதை டாடாவுக்கு ரூபாய் 18 ஆயிரம் கோடிக்கு விற்று உள்ளது என்றும் கூறினார்.

18 ஆயிரம் கோடியில் ரொக்கமாக டாடா நிறுவனம் தந்தது ரூபாய் 2700 கோடி தான் கடனை செலுத்த ரூபாய் 15 ஆயிரம் கோடி தருகிறது என்றும் கூறினார். ரூபாய் 20 ஆயிரம் கோடியில் நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் பணி டாடா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

அதில் கிடைக்கும் லாப தொகையிலேயே ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குகிறதோ என்ற ஐயம் எழுகிறது என்றும் தயாநிதி மாறன் கூறினார். நிரந்தரமாக யாரும் ஆட்சியில் இருப்பது இல்லை எல்லோரும் மாறிக்கொண்டே இருப்பார்கள் என்றும் தயாநிதி மாறன் பேசினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment