தற்போது இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வந்துள்ளார் அதானி. ஏனென்றால் கடந்த சில வாரங்களாக இவரின் சொத்து மதிப்பு அம்பானியின் சொத்து மதிப்பை விட அதிகமாக காணப்படுவது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்தியாவில் முதல் பெரிய பணக்காரர் என்ற பெயரை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் இலங்கையில் தொழில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்தியாவின் மிகப்பெரிய பிரபல தொழிலதிபரான அதானி இலங்கையில் தொழில் தொடங்க இருந்த நிலையில் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புறவாசல் வழியாக இலங்கைக்குள் அதானி குழுமம் நுழைவது இலங்கையின் மின்சார உற்பத்தி சீர்குலைத்து விடும் என்றும் எதிர் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பிரதமர் மோடி உதவுவதால் இலங்கையின் வளங்களை அவரது நண்பர் அதானிக்கு விற்க முடியாது என்று எதிர்க் கட்சியினர் கூறுகின்றனர். இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இரண்டு பெரிய மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை அதானி நிறுவனம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.