
பொழுதுபோக்கு
கீர்த்தி சுரேஷ் நடிகை ஆகாமல் பாடகியாக மாறிருக்கலாம்?.. Live-ல எப்படி பாடுறாங்கா !..
நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் மூலமாக தான் முதன்முறையாக தமிழ் சினிமாவில் நடித்தார். அதை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, சண்டக் கோழி 2, நடிகையர் திலகம் படம் வரை நல்லா இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், அஜய் தேவ்கனின் பாலிவுட் படமான மைதான் படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை மொத்தமாக குறைத்தார்.
முன்னணி நடிகரான விஜயுடன் இவர் பைரவா ,சர்க்கார் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு வெளியான ஹரி இயக்கத்தில் ‘சாமி 2’ படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், விக்ரமுடன் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள சர்காரு வாரி பட்டா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது
சமீபத்தில் தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் படம் மே 6 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் ஹிட் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.அதில் ரசிகர் ஒருவர் பாடல் பாருங்க என சொல்லவே,லைவ் இல் தெலுங்கு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
நயன்தாராவுக்கு இந்த நிலைமையை !!.. லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் என்ன ஆச்சி ?..
