சிக்கன்குனியாவை தடுக்க பெண் கொசுக்கள் உருவாக்கமா?: புதுச்சேரி அரசு

நம் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை, கேரள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது.

அவ்வப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் மழை பெய்து வரும். மேலும் வானிலை ஆய்வு மையமும் தமிழக மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவித்துக் கொண்டே வருகிறது.

மழைக்காலம் தொடங்கினாலே கொசுகளின் தொல்லை அதிகரிக்கும். மேலும் காலரா, டெங்கு போன்ற நோய்கள் இந்த மழைக்காலங்களில் அதிகமாக ஏற்படும். அதிலும் சிக்கன்குனியா போன்ற நோய்களும் கொசுவினால் ஏற்படும்.

இந்த சிக்கன் குனியாவிற்கு சிகிச்சைகள் அளிப்பதற்கான மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் புதுச்சேரி மாநில அரசு தற்போது சிக்கன்குனியாவை சமாளிக்கும் வகையில் திட்டம் ஒன்றினை அமல்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. அதன்படி டெங்கு மற்றும் சிக்கன்குனியாவை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மையத்தில் புதிய வகை கொசுக்களை உருவாக்கி உள்ளனர். ஆண் கொசுக்களுடன் புதிய வகை பெண் கொசுக்கள் இணையும் போது உருவாக்கும் கொசுவில் வைரஸ் இருக்காது என்றும் தெரிகிறது. நான்காண்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட wolbachia கொசுக்களை வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment