உங்களை அப்பானு கூப்பிடவா? ரசிகருக்கு நாசூக்காக பதில் அளித்த மாதவன்…!

திரைபிரபலங்கள் படங்களில் நடிப்பதை போலவே சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருப்பார்கள். காரணம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதன் மூலம் ரசிகர்களுடன் நேரடியாக கனெக்ட் ஆக முடியும். அவர்களிடம் நிறைய விஷயங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்பதால் தான்.

இதனால் பல நடிகர்கள் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் என்றால் 90’ஸ் சாக்லேட் பாய் நடிகர் மாதவன் தான். இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர் தற்போதும் உள்ளனர்.

தற்போது முக்கியமான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் மாதவன் ஹிந்தியிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவ்வபோது சோசியல் மீடியாவில் ரசிகர்களிடையே உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ள மாதவன் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடி உள்ளார்.

maddy tweet

அப்போது பெண் ரசிகை ஒருவர் மாதவனிடம், “நான் உங்களை அப்பா என்று கூப்பிடலாமா?” என கேட்டு பாச மழையை பொழிந்துள்ளார். அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த மாதவன் “என்னை அப்பா என்று கூப்பிட்டால் உன்னுடைய அப்பா புண்படுவார். எனவே நீ என்னை அங்கிள் என கூப்பிட ட்ரை பண்ணு” என்று கூறியுள்ளார்.

தற்போது மாதவனின் இந்த உரையாடல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தனது ரசிகையிடம் மிகவும் நாசூக்காக பதிலளித்த மாதவனின் இந்த டிவிட்டர் பதிவை ரசிகர்கள் டிரண்ட் செய்து வருகிறார்கள். இதுபோன்று ரசிகர்களுடன் மிகவும் பொறுமையாக உரையாடும் நடிகர்கள் மிக மிக குறைவு. மாதவன் போன்ற ஒரு சில நடிகர்கள் மட்டுமே தோழமையுடன் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment