முன்னாடி லாக்டோன் செஞ்ச பாடு; இப்போ மழை! நஷ்டத்தில் கால் டாக்ஸி;

உலகம் வேகமாக ஓடிக்கொண்டே உள்ளது. நம் கையில் இருக்கும் ஃபோனை கொண்டே கால் டாக்ஸி புக் பண்ணும் அளவிற்கு கண்டுபிடிப்புகள் ஏராளமாக வந்துள்ளன. இந்த கால் டாக்ஸி  தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது.

கால் டாக்ஸி

இந்த நிலையில் இந்த தொழில் மிகவும் பாதிப்பிற்கு செல்வதாக கால் டாக்ஸி ஓட்டுனர் சங்கத்திலிருந்து கூறப்படுகிறது. ஏனென்றால் தமிழகத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் வரவு மிகவும் குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள்  வராததால் வருவாயும் குறைந்துள்ளதாகவும் கால் டாக்ஸி தொழில் சங்கம் கூறியுள்ளது.

தொடர் பெட்ரோல், டீசல் விலை உயர்வும் இவர்கள் தொழிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே பொது முடக்கத்தால் கால் டாக்ஸி தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை தேங்கியுள்ளது அவர்களுக்கு மேலும் பாதிப்பை உண்டாக்கி உள்ளது.

இருப்பினும் ஆட்டோ மற்றும் இதர வாகனங்களை விட கால்டாக்சி தொழிலில் ஓரளவு பாதிப்பு தான் உள்ளதாக கால் டாக்சி ஓட்டுநர் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment