உதவி செய்ய தன்னார்வலர்களுக்கு அழைப்பு! செல்போன் மற்றும் இணையதளம் அறிவிப்பு!

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

2015 நவம்பர் மாதம் பெய்த மழையை விட 2021 நவம்பர் மாதம் பெய்த மழை அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக காணப்படுகிறது. அதிக மழைப்பொழிவை தந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சி

இந்நிலையில் சென்னை மாநகராட்சி தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு கொடுத்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

ஆனால் அழுகும் பொருட்கள், சமைக்கப்பட்ட உணவு வகைகள், பழைய பொருட்கள் வழங்குவதை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

வெள்ள நிவாரண பணிகளுக்கு உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் இணையத்தில் பதிவு செய்யலாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

http://forms.gle/NkEVTjvsH8hKTv009 என்ற மின் இணைப்பில் பதிவு செய்யலாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.இதனால் விருப்பமுள்ளவர்கள் மேற்சொல்லப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் கூறியுள்ளது.9444025821 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விபரங்களை அறியலாம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print