Connect with us

அலங்கார ஊர்தி புறக்கணிப்பு: ஜனவரி 26ஆம் தேதி அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்த அழைப்பு!

protest

News

அலங்கார ஊர்தி புறக்கணிப்பு: ஜனவரி 26ஆம் தேதி அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்த அழைப்பு!

அலங்கார ஊர்தி புறக்கணிப்பு: ஜனவரி 26ஆம் தேதி அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்த அழைப்பு!

இந்தியாவில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்ற சூழ்நிலை தான் தற்போது அரங்கேறிக் கொண்டு வருகிறது. ஏனென்றால் அடுத்தடுத்து இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நம் தமிழகத்தில் குடியரசு தினத்தன்று போராட்டம் நடத்த அனைத்து கட்சிகளுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

dk

ஏனென்றால் நடக்க இருக்கின்ற குடியரசு தின விழாவில் தமிழகத்தை சேர்ந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனால் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மத்திய அரசு நிராகரித்த வாகனம் அனுமதிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் அலங்கார ஊர்தி அனுமதி மறுத்ததை கண்டித்து அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்த திராவிட கழகத்தின் சார்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று அனைத்து கட்சி அலுவலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் குரலை எழுப்ப கி.வீரமணி  அழைப்பு விடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top