தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவினில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. குறிப்பாக புது புது வகைகளில் ஐஸ்கீரிம், இனிப்பு மற்றும் கார வகைகளை அறிமுகம் செய்து வருகிறது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகள் நெருங்கி வருவதால் நுகர்வோரின் தேவைகளுக்கு ஏற்ப ஆவின் நிர்வாகம் சிறப்பு கேக் வகைகளை அறிமுகம் செய்துவைத்துள்ளது.
அதன் படி, பிளாக் பாரஸ்ட் கேக், சாக்கோ ட்ரிபில், ஸ்ட்ராபெரி கேக், பைனாப்பில் கேக், ஒயிட் ஃபாரஸ்ட் கேக், பட்டர்ஸ்காட்ச் கேக், ரெயின்போ கேக் உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே போல் பிளாக்கரண்ட் கேக், ரெட் வெல்வெட் கேக், டெத் பை சாக்லேட் கேக், பிளம் கேக் உள்ளிட்டவைகள் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஏற்கனவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20 வகையாக இனிப்பு வகைகளை ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.