தொற்றுநோய் அச்சத்தை தரும் கேட்பேரி சாக்லேட்கள்…! அதிர்ச்சி தகவல்!

வளரும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருப்பது சாக்லேடு தான், குழந்தைகள் அழுகையை கட்டு படுத்துவதில் இருந்து நல்ல நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியை பரிமாறவும் இந்த சாக்லேடுகளை தான் நாம் பயன் படுத்துகிறோம்.

நம் அன்றாட வாழ்வியல் உணவு முறைகளில் சாக்லேடு தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் பாக்டீரியா தொற்று காரணமாக இங்கிலாந்து முழுவதும் கேட்பரி சாக்லேடுகளை திரும்ப பெறுவதாக கேட்பரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் மிகவும் பிரபலமான சாக்லேட் நிறுவனமாக கேட்பரி திகழ்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து முழுவதும் விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள கேட்பரி சாக்லேட்களும் விற்கப்பட்ட கேட்பரி சாக்லேட் களும் திரும்ப பெறுவதாக கேட்பரி நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

லிஸ்ட்டிரியோ தொற்று எனப்படும் உணவு மூலம் பரவும் பாக்டீரியா தொற்று அச்சத்தின் காரணமாகவே சாக்லேட்டுகளை திரும்ப பெறுவதாக கேட்பரி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பாதாம் பருப்பை தோலோடு சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?

இந்த சாக்லேடுகளை கர்ப்பிணி பெண்கள் 60வது வயதுக்கு மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டால் மிகவும் ஆபத்து என்றும் எச்சரித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற கேட்பரி நிறுவனம் தங்களது ஆறு தயாரிப்புகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருப்பது அந்த நாட்டு மக்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த தகவல் சாக்லேடுகளை அதிகாமாக சாப்பிடுபவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...